சுமந்திரன் எம்.பியின் கருத்து முரண்பாட்டை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது: விஜேதாச

Mayoorikka
2 years ago
சுமந்திரன் எம்.பியின் கருத்து முரண்பாட்டை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது: விஜேதாச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இருபத்தி இரண்டாவது சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும், நீதிமன்றம் அவ்வப்போது தனது சட்ட நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படும் பிரேரணையின்றி, நீதித்துறையையோ அல்லது நீதிபதிகளையோ நாடாளுமன்றத்தில் விமர்சிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே எம்.ஏ. சுமந்திரனின் கருத்து நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் பலத்த முரண்பாட்டை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!