கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் முன்னிற்க போவதில்லை-சட்டமா அதிபர்

Kanimoli
2 years ago
 கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் முன்னிற்க போவதில்லை-சட்டமா அதிபர்

காலநிலை மாற்றத்தை தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இனிமேல் முன்னிற்க போவதில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சுற்றாடல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க, நீதிமன்றத்திற்கு இந்த அறிவித்தலை தெரிவித்துள்ளார்.

யசந்த கொண்டகொட, ஏ.எச்.எம். நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!