பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை

Kanimoli
3 years ago
 பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை

மாத்தறை திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் ​​அதனை நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாகி இயங்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனால் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4