இரண்டு நாட்களில் காலாவதியாகும் 70 லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள்!

Kanimoli
3 years ago
இரண்டு நாட்களில் காலாவதியாகும் 70 லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள்!

ஃபைசர் தடுப்பூசியின் எஞ்சிய தடுப்பூசிகள் உரிய முறைகளைப் பயன்படுத்தி அகற்றப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட கொரோனாவுக்கு எதிரான 7 மில்லியன்  ஃபைசர்  தடுப்பூசிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் காலாவதியாகின்றன.

இதனையடுத்தே அவை உரிய முறையில் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பிறகு, புதிய தொகுதி இறக்குமதி செய்யப்படும் வரை,  ஃபைசர் தடுப்பூசி இனி நாட்டில் கிடைக்காது என்று, சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

எனவே தடுப்பூசிகள் காலாவதியாகும் முன், ஃபைசரின்  இரண்டாவது பூஸ்டர் அளவுகளை அவசரமாகப் பெறுமாறு பொதுமக்களிடம் ஹேரத் கோரியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4