எதிர்வரும் 8 ஆம் திகதி அரசாங்கம் கவிழும் அபாயம் - சன்ன ஜயசுமண
எதிர்வரும் 8 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கவிழும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
22 திருத்தத்திற்கு வாக்களிக்காத ஆளும்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிலையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கத்தைக் கலைக்க வற்புறுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் ஒரு சிறிய பகுதியானாலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினால், வரவு செலவுத் திட்டம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.