தென்கொரியாவில் இடம்பெற்ற சம்பவத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழப்பு
தென்கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற விருந்தொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மேலும் பல இலங்கையர்கள் உயிரிழந்துள்ளாரா அல்லது காயமடைந்துள்ளாரா என்பதை கண்டறிய தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இரவு பார்ட்டிகளுக்கு பெயர் பெற்ற பகுதியில் நேற்று நடைபெற்ற ஹாலோவீன் பார்ட்டியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் 19 பேர் வெளிநாட்டவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பிரபல தென்கொரிய நடிகை ஒருவர் விருந்து இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் உணவகம் ஒன்றில் இருந்த போது, குறுகிய வீதியொன்றில் பார்வையிட்டுக் கொள்வதற்காக பலர் முன்வந்தமையே இந்த சம்பவத்திற்கு காரணம் என சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தென் கொரிய அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை அறிவிக்கவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.