கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்து செல்லப்பட்டு பலி
Kanimoli
2 years ago
முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
29.10.22 நேற்று காலை கருநாட்டுக்கேணி கடற்கரைப்பகுதியில் கரைவலைக்காக கடலில் இறங்கி கயிறு இழுத்த வேளை கடல் அலை இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் 30.10.22 நேற்று காலை கொக்குளாய் கடற்கரையில் காணாமல் போன மீனவரின் உடலம் கரைஒதுங்கியுள்ளது.
உடலத்தினை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் காவல்துறைக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.