கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி, கிளிநொச்சியில் போராட்டம்
Mayoorikka
2 years ago
மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது.
நில அபகரிப்பு, தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய 100 நாள் போராட்டம் 92 வது நாளான இன்று கிளிநொச்சி – பூநகரி வாடியடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.