ஆட்பதிவு திணைக்களத்தின் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
ஆட்பதிவு திணைக்களம் (டிஆர்பி) நாளை முதல் தேசிய அடையாள அட்டைகள் (என்ஐசி) வழங்குதல் உட்பட திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளது.
செப்டெம்பர் 22 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, இந்த தீர்;மானம் எடுக்கப்பட்டதாக, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆடையாள அட்டையின் திருத்தப்பட்ட நகலை வழங்குவதற்கான கட்டணம் 500 ரூபாவால் உயர்த்தப்படுகிறது.
தொலைந்து போன அடையாள அட்டையின் நகல் வழங்குவதற்கு 1,000 ரூபா விதிக்கப்படும்.
மின்னணு தேசிய அடையாள அட்டைகள், ஆரம்பிக்கப்பட்ட பின்னர் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த அட்டைகளுக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக கட்டணம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் அடையாள அட்டையை பெறுவதற்கு (விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக) 2,000 ரூபாவால் அதிகரித்து அறிவி;டப்படும்.
அடையாள அட்டையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு 2,000 ரூபா கட்டணம் வசூலிக்கப்படும்.
இலங்கையில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள்; மற்றும் இலங்கையில் நிறுவப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களின் கோரிக்கைகளின்படி, அடையாள அட்டையில் உள்ள விபரங்களை சான்றளிக்க 500 ரூபாவும், தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு 1,000 ரூபாவும் அறிவிடப்படும்.
போட்டோ ஸ்டுடியோக்களை(புகைப்பட மையங்கள்) பதிவு செய்ய 15,000 ரூபா வசூலிக்கப்படும். போட்டோ ஸ்டுடியோக்களின் பதிவு புதுப்பித்தலுக்கு (இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை) 3,000 ரூபா வசூலிக்கப்படும்