யானையின் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணை பார்வையிடச் சென்ற பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்குமிடையில் வாக்குவாதம்
Prathees
2 years ago
அனுராதபுரம் கபிதிகொல்லேவ பிரதேசத்தில் நேற்று இரவு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அங்கு சென்ற போது, பிரதேசவாசிகளின் எதிர்ப்பினால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அந்த இடத்தில் திரண்ட பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குழுவைச் சேர்ந்த ஒருவரின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.