அபேக்ஷா மருத்துவமனையில் 50 வீதமான மருந்துகள் தட்டுப்பாடு

Prathees
2 years ago
அபேக்ஷா மருத்துவமனையில் 50 வீதமான மருந்துகள் தட்டுப்பாடு

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகளில் 50 வீதமானவை பற்றாக்குறையாக காணப்படுவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலை சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சில மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாட்கள் ஆகியும் கிடைக்காத நிலையைக் கருத்திற்கொண்டு இந்த அளவு மருந்து கிடைக்கவில்லை எனக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை நண்பர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கோருவதாகவும், மருந்துகளை வழங்கி உதவக்கூடியவர்கள் இருப்பின் வைத்தியசாலைக்கு மருந்துகளை வழங்க முடியும் எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.

அபேக்ஷா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு பரிந்துரைக்கப்படும் சில மருந்துகள் விலை உயர்ந்தவை எனவும், அவ்வாறான மருந்துகள் மற்றும் பற்றாக்குறையான மருந்துகளை நன்கொடையாக வழங்கக்கூடியவர்கள் இருப்பின் வைத்தியசாலையை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.

மருந்து விநியோகஸ்தர்களுக்கு பல மாதங்களாக செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்படாமையே மருந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!