வவுனியா புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

Kanimoli
2 years ago
வவுனியா புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

யாழில் இருந்து இன்று (31) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது புகையிரதப் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக புகையிரதத் திணைக்களத்தினர் மற்றும் காவலல்துறையினர் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த சடலம் சேட் இன்றி கறுப்பு காற்சட்டை அணிந்தவாறு காணப்படுவதுடன், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட ஆண் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதால் மரணமடைந்ததாரா? அல்லது ஏற்கனவே தாக்கப்பட்டு புகையிரதப் பாதையில் போடப்பட்டாரா என்ற அடிப்படையில் கனரகராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!