முச்சக்கரவண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் – பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்
Mayoorikka
2 years ago
பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்காக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கத்தை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த செயற்பாடு முதற்கட்டமாக இன்று முதல் மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் ஏனைய மாகாணங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதற்காக www.wptaxi.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் ஊடாக மேல் மாகாண பயணிகள் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்துக் கொள்ள முடியும்.
இதனை 11 படிமுறையின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும். அதில் முச்சக்கர வண்டியின் புகைப்படங்களும் சேர்க்கப்பட வேண்டும்.