தமது நாட்டுக்கு, நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும்
கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு, நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை , மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (01) தெரிவித்தார்.
இலங்கைக்கு ஏதேனும் ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச பெற்றோலிய கண்காட்சி மற்றும் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அதேசமயம் அரசாங்கங்களும் தனியார் துறைகளும் தங்களது குறைக்கப்பட்ட காபன் மற்றும் நிகர-பூஜ்ஜிய உத்திகளை எவ்வாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை கலந்துரையாட அபுதாபி மாநாட்டில் அமைச்சர்கள் ஒன்றுகூடியுள்ளனர். ஜோர்ஜியா, துருக்கி, ருமேனியா ஆகிய நாடுகளின் துறைசார் அமைச்சர்களின் குழுவில் அமைச்சர் காஞ்சனவும் இடம்பெற்றுள்ளார்.