நாட்டின் கடினமான காலகட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் தளர்த்தப்படும்: பிரதமர் நம்பிக்கை 

Prathees
1 year ago
நாட்டின் கடினமான காலகட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் தளர்த்தப்படும்: பிரதமர் நம்பிக்கை 

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பதவியில் இருப்பவர் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல்துறை தொழிலாளர் சங்கத்தின் 77 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பொதுச் செயலாளர் அஜித் தம்மிக்க ஆகியோர் அதே பதவிகளுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

ரூபாயின் மதிப்பு வலுவிழந்தால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவின் பாதகத்தை மக்கள் நேரடியாகச் சுமக்க வேண்டியுள்ளது.இதன் காரணமாக சில முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்து மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆனால் எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி எந்தளவுக்கு வீழ்ச்சியடையும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை, தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்திற்கு சிறந்த ஆதரவைப் பயன்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகக் கடினமான காலகட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் தளர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர், நாடு எதிர்நோக்கும் சர்வதேச கடன் பிரச்சினையில் இருந்து மீள முழு நாடும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி திஸ்ஸ யாப்பா, பொருளாளர் சேன சிறிமான்ன, தொழிற்சங்க செயலாளர் அஜித் பண்டார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.