ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு!முதல் கட்டப்பணிகள் ஆரம்பம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பான முதல் கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்ப நட்டமடைந்து வரும் இந்த விமான சேவையை தனியார்மயப்படு;த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான கருத்துக்களை ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில் மறுசீரமைப்பு பரிந்துரைகளை வழங்குவதற்கான பணியை, நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவன மறுசீரமைப்பு பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
இது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சினால்; சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்;பட்டுள்ளது.
இதன்படி இந்த அமைச்சரவை பத்திரத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களும், கணிசமான அளவு பங்குகள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகத்தை முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்து மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான காலவரையறை எதுவும் வரையப்படவில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.