முட்டை ஒன்றின் விலை 10 ரூபாய் தொடக்கம் 7 ரூபாயினால் குறைக்கப்படலாம் - அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம்
Kanimoli
2 years ago
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாய் தொடக்கம் 7 ரூபாயினால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சில கோழிப்பண்ணை உரிமையாளர்களின் தலையீட்டில் இந்த விலை குறைப்பு செய்யப்படமாட்டாது என சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், கால்நடை தீவனத்திற்கு சோளத்திற்கு பதிலாக சுண்ணாம்பு அரிசி அல்லது உடைந்த அரிசியை மாற்றாகப் பயன்படுத்துவது பொருத்தமானது என்று பரிந்துரைத்துள்ளது.