வடக்கில் முதன்முறையாக சுற்றுலாச் சரணாலயம் அமைக்க நடவடிக்கை!

#NorthernProvince #Tourist #Ranil wickremesinghe
Nila
1 year ago
 வடக்கில்  முதன்முறையாக சுற்றுலாச் சரணாலயம் அமைக்க நடவடிக்கை!

வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சுற்றுலா சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான காணியை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது வடக்கு மாகாணத்தில் தனியான சுற்றுலா சரணாலயம் இல்லை.நாட்டின் ஏனைய பகுதி சரணாலயங்கள்பெரும்பாலான சரணாலயங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் நாட்டின் பிற பகுதிகளில் அமைந்துள்ளன.

எனவே வடமாகாணத்தின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தெற்கில் உள்ள விலங்கினச்சாலைகளையும், சரணாலயங்களையுமே பார்வையிட வர வேண்டும்.

இதனை கருத்திற்கொண்டு வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள புதிய சுற்றுலா சரணாலயத்திற்கு பொருத்தமான காணியை தேடுமாறு, அமைச்சர், அமரவீர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, யால தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்களை தற்காலிகமாக அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் அமரவீர வனஜீவராசிகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு பதிலாக யால தேசிய பூங்காவிற்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.