ஆதாரமற்ற, பொய்யான பிரசாரங்களால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது!கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு!
ஆதாரமற்ற, பொய்யான பிரசாரங்களால் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது என கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினாலும் பொய்யான பிரச்சாரங்களினாலும் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலட்டைப் பண்ணைகளுக்கு விண்ணப்பம் செய்த சிலரே நடைமுறைச் பிரச்சினைகள் காணமாக இதுவரை கிடைக்காத நிலையில் கடற்றொழிலாளர்களின் சமாசங்களின் பெயரால் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் போது, அவை மக்களின் மனங்களில் ஆழமான கருத்துக்களாக பதிந்துவிடும் என்ற ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் கோட்பாடுகளில் ஒன்றை சுட்டிக்காடடிய கடற்றொழில் அமைச்சர், கடலட்டை பண்ணைகள் பற்றிய உண்மைகள் மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.