டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என எச்சரிக்கை!
Prabha Praneetha
2 years ago
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதத்தின் பிற்பகுதியிலும் டிசெம்பர் மாதத்திலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு உச்சக்கட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் தற்போது டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 586 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.