ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது - அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
Kanimoli
2 years ago
ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்துமாறும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (2) நடத்தப்படும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் முன்னரே எச்சரித்திருந்தனர்.
அத்தோடு, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து போராட்ட தலைவர்களுக்கு காவல்துறையினர் இன்று கடிதமும் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், குடிமக்களின் உரிமைகளை ஆதரிப்பதற்கான இடத்தை உறுதி செய்யுமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.