பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவு

Kanimoli
2 years ago
 பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவு

   யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

அதன் போது பெண்ணொருவரின் தோட்டினை கழட்டும் போது , அது கழறாத போது, பெண்ணின் காதில் இருந்து தோடு பிடுங்கி எடுத்துள்ளனர். அதனால் அப்பெண்ணின் காதில் காயம் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதேவேளை கொள்ளையடித்து செல்லப்பட்ட நகைகளில் ஒரு நகை கவரிங் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!