ராஜபக்ச குடுபத்துக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட்ட ராஜபக்ச குடுபத்துக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கொழும்பில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் குரல்கொடுத்துள்ளனர்.
அரச எதிர்ப்பு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் இவ்வாறு குரல்கொடுப்பட்டமை கடந்த மாதத்தில் தமது அதிகார மைத்தின் மீளெழுச்சிக்காக மகிந்த தலைமையில் நடத்தபட்ட மூன்று பேரணிகளுக்குரிய பதிலடியாக இன்றைய பெரும் பேரணி பதிவாகியுள்ளது.
பல கட்டங்களில் சிறிலங்கா காவல்துறை விதித்த தடையை மீறி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோதும் வன்முறைகள் ஏதும் இடம்பெறவில்லை.
இன்றைய போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்திருந்தபோதும், பெருமளவில் திரண்ட மக்கள் கூட்டம் காரணமாகவும் அனைத்துலக அழுத்தங்கள் காரணமாகவும் காவல்துறையினர் இந்தப் பேரணியை ஆரம்பதிலேயே தடுத்து நிறுத்தவில்லை.
இன்றைய போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உட்பட்ட 20 அரசியல் கட்சிகள், 150 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுஅமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.