இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
Kanimoli
2 years ago
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
சுவிஸ் இன்டர்நஷனல் ஏர் லைன்ஸ், இம்மாதம் முதல் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
குறித்த விமான நிறுவனம் 10 நவம்பர் ஆம் திகதி முதல் அடுத்த வருடம் மே மாதம் வரை வாராந்தம் 3 விமான சேவைகளை இயக்கும்.
இவ்வாறான சேவை விஸ்தரிப்பு வரவிருக்கும் சுற்றுலாப் பருவத்திற்கான ஐரோப்பிய வருகையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கடந்த காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் Zurich நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.