நீதிமன்றத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்
Prathees
2 years ago
நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சந்தேக நபரை இம்மாதம் (09) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார்.
நுவரெலியா நானுஓயா பரக்கும்புர பகுதியைச் சேர்ந்த ரொஷான் சமிந்த (வயது 43) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு (02) தனது நண்பருடன் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக வந்திருந்த போது நீதிமன்றில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் அமைதியாக இருக்குமாறு எச்சரித்ததை அடுத்து சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய போது, நீதிமன்றப் பகுதியில் கடமையாற்றிய ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைப் பிடித்து நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.