பேஸ்புக் காதலனை கடற்கரைக்கு அழைத்து வந்து அனைத்தையும் திருடிச் சென்ற நபர்கள்
தொடங்கொடவைச் சேர்ந்த 18 வயது இளைஞன்இ பேஸ்புக்கில் யுவதி என அடையாளம் காணப்பட்ட போலி நபரிடம் தனது காதலை வெளிப்படுத்திய பின்னர், இருவரும் சுமார் ஒருவாரம் அரட்டை அடித்து பின்னர் கட்டுகுருந்த கடற்கரையில் சந்திக்குமாறு கூறி வரவழைத்து இளைஞனிடமிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த இளைஞன் பயாகல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடங்கொட பிரதேசத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் உரையாடி யுவதி போன்று நடித்து பேஸ்புக் ஊடாக காதல் உறவை ஏற்படுத்திய போலி நபரிடம் சிக்கியுள்ளார்.
கடற்கரையில் சந்திப்பதற்காக வந்தபோதுஇ அடையாளம் தெரியாத இருவர் ஒரே நேரத்தில் வந்து இவரின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.
இதையடுத்துஇ மொபைல் போன் மற்றும் சார்ஜர்இ பவர் பேங்க் மற்றும் ரூ.4000 ஆகியவற்றை எடுத்துச் சென்ற இளைஞர்களை, பயாகலை பொலிசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. .
பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபிலவின் பணிப்புரையின் பேரில் குற்றப்பிரிவு நிலைய கட்டளை பொலிஸ் பரிசோதகர் பண்டார உப பொலிஸ் பரிசோதகர் லக்மால் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
இளைஞனை கொள்ளையடித்த சந்தேக நபர்கள் இருவரும் கட்டுகுருந்த மற்றும் அய்யகம பிரதேசத்தில் வசிக்கும் இரு இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.