ஜெர்மனியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் சிக்கிய போதை மாத்திரைகள்
Nila
2 years ago
ஜெர்மனியிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் இருந்து ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து, தபால் மூலம் அனுப்பப்படும் பொதிகளை சோதனையிடும் - சுங்க பிரிவின் தபால் மதிப்பீட்டு பிரிவு அதிகாரிகளே குறித்த போதை மாத்திரைகள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பொதி ஜேர்மனியிலிருந்து, அங்கொடையைச் சேர்ந்த நபர் ஒருவரின் பெயருக்கு தனிப்பட்ட பாவனைப் பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.