நாட்டு மக்களை உணர்வுடன் கையாளக்கூடிய தலைமைக்கு மட்டுமேவாக்களிக்க வேண்டும்!
Mayoorikka
2 years ago
நாட்டு மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்திரமான வேலைத்திட்டத்துடன் வறிய சமூகத்திற்காக எழுந்து நிற்கக்கூடிய சட்டத்தை மதிக்கும் தலைமைத்துவத்தினால் மட்டுமே நாட்டின் நெருக்கடிகளை தீர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்பெல்லாம் பிரதேசசபை முறை இருந்தது என்றும் நாம் நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்கும் போது அவர் தனது பிரதேச மக்களை முடிந்தவரை கவனித்துக்கொள்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது அவ்வாறில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த நாட்டு மக்களை உணர்வுடன் கையாளக்கூடிய தலைமைக்கு மட்டுமேவாக்களிக்க வேண்டும் என அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.