இலங்கை தமிழர்களில் மேலும் 10பேதனுஷ்கோடி நடுத்துறை தீவுக்கு சென்றடைந்துள்ளனர்.

Kanimoli
1 year ago
இலங்கை தமிழர்களில் மேலும் 10பேதனுஷ்கோடி நடுத்துறை தீவுக்கு சென்றடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர்களில் மேலும் 10பேர், தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள நடுத்துறை தீவுக்கு இன்று சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் சென்றடைந்துள்ளனர்.
இவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஆர்.புஷ்பம் (64) தினக்கூலியாக பணிபுரிந்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வேலை எதுவும் இல்லை. இதனால் என்னால் சம்பளம் வாங்க முடியவில்லை. பணம் இல்லாமல், அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அவர் கூறினார். நான் சில மதிப்புமிக்க பொருட்களை விற்று, எங்களை இங்கு இறக்கிவிட்ட படகோட்டிகளுக்கு மிகவும் சிரமப்பட்டு 50,000 ரூபாவை செலுத்தினேன் என்றும் புஷ்பம் மேலும் கூறினார்.
மற்றுமொரு அகதியான யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ஜஸ்டின் (42), பொருளாதார நெருக்கடிக்கு முன்னர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்த போதிலும், குறைந்தபட்சம் தங்களுக்கு வேலை வாய்ப்புகள் இருந்தன. இப்போது வேலை இல்லாததால், குடும்பம் மற்றும் அதைச் சார்ந்தவர்களுக்கு உணவு வழங்குவது பெரிய சவாலாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
சோதனையின் பின்னர், அவர்;கள் மண்டபம் மறுவாழ்வு மைய அதிகாரிகளிடம் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த குழுவுடன், மையத்தில் 199 இலங்கை தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஒரு வயதான பெண் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த முகாமில் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.