முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இன்று இரவு முதல் அதிகரிப்பு
Prathees
2 years ago
மேல் மாகாணத்தில் தொழில்முறை முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிப்பது தொடர்பான QR தரவு முறைமையின் புதுப்பிப்பு இன்று (06) இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு நாளை (07) முதல் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.