நுவரெலியா, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பலி
Kanimoli
2 years ago
நுவரெலியா, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி அந்தப் பகுதியில் உள்ள 'கெமில்டன்' கால்வாயைக் கடக்க முயன்ற போது, நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை மீட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
வெதமுல்ல, கெமில்டன் பகுதியைச் சேர்ந்த தரம் 5 இல் கல்வி கற்கும் யோகராஜா அனுஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் நேற்று மாலை பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளார் என்று பொலிஸார் மேலும் கூறினர்.