மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து சிறப்புக் குழு விசாரணை 

Prathees
2 years ago
மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து சிறப்புக் குழு விசாரணை 

பண்டாரகம, மில்லனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பலர் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த குழுவின் அதிகாரிகள் குழுவொன்று பாடசாலைக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்கு சொந்தமான மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சிறுவர்களை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

திருட்டு தொடர்பில் பல பாடசாலை ஆசிரியர்கள் பிள்ளைகளை தாக்கியதாகவும், பின்னர் மில்லனியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவர்கள் அந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறித்த சிறுவர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமான முறையில் தாக்கியதாகவும் ஒரு மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!