தனுஷ்க குணதிலக்கிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு பிணை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனால் அவர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இன்று (7) சிட்னி நீதிமன்றில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக பிணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் சாம்பல் நிற டி-சர்ட் அணிந்திருந்தார் மற்றும் அவரது கைகளில் கைவிலங்கு கட்டப்பட்டிருந்தது
அவர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த மட்டுமே தோன்றினார்.
தனுஷ்க குணதிலக்க வெளிநாட்டவர் என்பதாலும், அவர் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்பதாலும் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை அவர் காத்திருப்பு மையத்தில் வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.