அகில இலங்கை ரீதியிலான தமிழ்தினப் போட்டியின் தனிநடிப்பில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வடமராட்சி மாணவனுக்கு மதிப்பளிப்பு!
நடைபெற்று முடிந்த அகில இலங்கை ரீதியிலான தமிழ்தினப் போட்டியின் தனிநடிப்பு போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வடமராட்சி கிழக்கு மண்ணின் மைந்தன் தாளையடியை சேர்ந்த, செம்பியன்பற்று அ.த.க பாடசாலை மாணவன் ஆ. அபினாஸ் அவர்களை வடமராட்சி கிழக்கின் கலை ஊக்கி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கின் கலைஞர்கள் நேரடியாக அவரது வீட்டில் சந்தித்து கௌரவம் செய்து மதிப்பளித்துள்ளனர்.
இதன் போது அவருடைய கலைப்பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, முக்கிய சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
இவருடைய கலைப்பயணம் வெற்றியுடன் தொடர இறைவனை பிரார்த்திப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
அத்துடன் இவரை போன்று எமது பிரதேசத்தில் அதிகமான கலைஞர்களின் திறமைகள் வெளிக்கொண்டு வரப்படாமல் இருக்கின்றது. அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு எப்போதும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். வடமராட்சி கிழக்கு மக்களும், மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புக்களும் கலைஞர்களுக்கான ஆதரவை வழங்குமாறும், வாழ்த்தி உயர்த்துமாறும் கேட்டுநிற்கின்றோம் என வடமராட்சி கிழக்கின் கலை ஊக்கி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கின் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்..