ஜனாதிபதிக்கும் கொரிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொரிய குடியரசின் தூதுக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி நா கியுங்-வோனை (Na Kyung-won) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது (COP 27) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று எகிப்துக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.