ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை!

Mayoorikka
1 year ago
ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆலோசித்து வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.


1987, இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி, ஆளுநர் பதவியானது, மாகாண சபைகள் மீது நிறைவேற்று அதிகாரங்களை செலுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பதவியாகும். இதன்படி மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் சம்பந்தப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும்.

தற்போது மாகாண சபைகள் இயங்காத நிலையில், ஆளுநர்கள்களே  முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளனர்.


இந்தநிலையில் அரசியல் அனுபவமுள்ளவர்களை ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என அவரின் நெருங்கிய தரப்புக்கள் கூறுகின்றன.