தனுஷ்கவின் பொறுப்பற்ற செயலுக்காக மன்னிப்புக் கோரிய விளையாட்டுத் துறை அமைச்சர்!

Mayoorikka
2 years ago
தனுஷ்கவின் பொறுப்பற்ற செயலுக்காக மன்னிப்புக் கோரிய விளையாட்டுத் துறை அமைச்சர்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க,இன்று மன்னிப்புக் கோரியுள்ளார்.

விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் மன்னிப்பை கோருவதாக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தாம் கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்கேற்ப தேவையான மற்றும் திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு, தமது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ரொஷா ன் ரணசிங்க கூறியுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!