இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர்- டேவிஸ் ஒஃப் அபர்சோக் பிரபு, மூன்று நாள் பயணமாக கொழும்பு வந்துள்ளார்
Kanimoli
2 years ago
இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர்- டேவிஸ் ஒஃப் அபர்சோக் பிரபு, மூன்று நாள் பயணமாக கொழும்பு வந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்; தெரிவித்துள்ளது.
வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கிலும், இங்கிலாந்து-இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் பரஸ்பர வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் அவர் இலங்கையில் அரச மற்றும் வர்த்தக பிரமுகர்களை சந்திப்பார்.
பிரித்தானிய முன்னாள் வங்கியாளரும் முன்னாள் தொழிற்கட்சி அரசாங்க அமைச்சருமான இவர், 2020 அக்டோபரில் அப்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சனால் இலங்கைக்கான இங்கிலாந்து பிரதமரின் வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டார்.
2002 இல் ஹொங்கொங்கில் நிதித்துறை மற்றும் சமூகத்திற்கான அவரது சேவைகளுக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது,