அரசாங்கம் இழந்த 16 பில்லியன் ரூபாவில் 24 சதவீதத்தை சீனி வரிச் சலுகையில் இருந்து வருமான வரியாக வசூலிக்க தீர்மானம்

Prathees
2 years ago
அரசாங்கம் இழந்த 16 பில்லியன் ரூபாவில் 24 சதவீதத்தை சீனி வரிச் சலுகையில் இருந்து வருமான வரியாக வசூலிக்க தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்திற்கு நஷ்டமான 16 பில்லியன் ரூபா வருமான வரியை அறவிடுவதற்கு தயார் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டத்தின்படி அதில் 24 சதவீதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வருமான வரியாக வசூலிக்க முடியும் என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனி வரி குறைப்பினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருமானம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் தயாரித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்கும் போதே பதில் நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உரிய நேரத்தில் சீனி வரி அறவிட தீர்மானித்த அதிகாரிகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இங்கு வினவினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!