மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர் பணியில் இருந்து இடைநீக்கம்
Prathees
2 years ago
5ஆம் தர மாணவர்கள் குழுவை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மில்லனியா, குங்கமுவ அதிபர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய அதிபர், ஆசிரியர் மற்றும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.