கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்பு
கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் உள்ள நீர் கால்வாயில் கூரிய ஆயுதத்தால் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கோணாவில் ஊற்றுப்புலம் ஏரியின் நீர் வயல்களுக்குள் செல்லும் கால்வாயில் சடலம் ஒன்று காணப்பட்டதையடுத்து விவசாயி ஒருவர் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை பரிசோதித்த போது உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.
ஒரு கும்பல் அல்லது நபர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோணாவில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பி. சத்தியராஜ் என்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பான மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.