சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
Prabha Praneetha
2 years ago
லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம் சிவசாமியும் கலந்து கொண்டார்.
நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லண்டனில் முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைய 8 அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பிலும், 4பேர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு இருந்தனர்.