குரங்கம்மை நோய் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - வைத்திய நிபுணர் ஹேமந்த
Prasu
2 years ago
நாட்டில் இரண்டு குரங்கம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டுபாயைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது நேற்று (09) கண்டறியப்பட்டது, இதுவரை இலங்கையில் இரண்டு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.