பெண்ணை தாக்கி சூடு வைத்த வங்கியின் உயர் அதிகாரிக்குப் பிணை வழங்க மறுத்த கம்பஹா நீதிவான்
Prasu
2 years ago
பெண் ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியில் உயர் பதவியை வகிக்கும் சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுத்த கம்பஹா நீதிவான் மஞ்சுள கருணாரத்ன, சந்தேக நபரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (நவ. 09) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர், குறித்த பெண்ணை தீயினால் சூடு வைத்து, எரித்து சித்திரவதை செய்யும்போது உயிரைக் காப்பாற்ற மேல் மாடியிலிருந்து கீழே குதித்ததாக காயமடைந்த பெண் கம்பஹா பொலிஸில் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சய் குணசேகரவும் அவரது உடல் எரிக்கப்பட்ட விதம் குறித்த புகைப்படங்களை முன்வைத்தார்.