மாலைதீவி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ 9 பேர் உட்பட 11 பேர் பலி

Kanimoli
2 years ago
மாலைதீவி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ 9 பேர் உட்பட 11 பேர் பலி

மாலைதீவின் தலைநகர் மாலேவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் 9 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விபரங்களை திரட்டி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக மாலைதீவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் பங்களாதேஷ்சைச் சேர்ந்த இருவரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாலைதீவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எரிந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் இடத்திலேயே முதலில் தீ பற்றியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீயை அணைக்க நான்கு மணி நேரம் எடுத்ததாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் இந்திய பிரஜைகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் கூறியுள்ளது.

இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தமை குறித்து ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், மாலைத்தீவு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!