பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்த விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு
Prabha Praneetha
2 years ago
பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது
இதற்கமைய இதன் பின்னர் எந்தவொரு பொலிஸ் பிரிவிலும் பதிவாகும் பகிடிவதை தொடர்பிலும் சி.ஐ.டி.யினரேயே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.