வசந்த முதலிகே பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Prathees
2 years ago
வசந்த முதலிகே பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே சார்பில் அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும், கராப்பிட்டிய வைத்திய பரிசோதகர் முன்னிலையில் ஆஜராகி முழுமையான அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

திரு.விஜித் மலல்கொட மற்றும் திரு.எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு ஜனவரி 31-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!