யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அலுவலகம் மீது தாக்குதல்
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணைத் தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனம்தெரியாத நபர்களினால் நேற்று இரவு 9 மணியளவில் கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று(10) காலை யாழ். இந்திய துணைத் தூதுவரினால் யாழ்ப்பாண காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.