இலங்கை தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விளக்கம்
Prathees
2 years ago
மாலைதீவின் மாலேயில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் இலங்கையர்கள், இந்தியர்கள் மற்றும் பங்களாதேஷ் தேசிய தொழிலாளர்கள் குழுவொன்று தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல் போயுள்ளனர்.
மீட்பு குழுவினர் அங்கு தங்கியிருந்த 28 பேரை வெளியேற்றி உள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 08 இந்திய பிரஜைகள், ஒரு பங்களாதேஷ் பிரஜை மற்றும் இரண்டு சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.