வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி சங்கிலியை அபகரிப்பு

Kanimoli
2 years ago
 வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி சங்கிலியை அபகரிப்பு

 யாழ்.கோப்பாய் - பாலணை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் வயோதிப பெண் ஒருவர் மட்டும் தனித்திருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த இருவர் அவரை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையிட்டவர்களை குறித்த வயோதிப பெண் அடையாளம் காட்டியுள்ளார். இதன்படி வயோதிப பெண்ணின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் உறவினரே கொள்ளையில் ஈடுபட்டார் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இரு வாரங்களுக்கு முன்னரும் அப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த வயோதிப பெண்ணை அச்சுறுத்தி தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!